×

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் முடிந்து நெம்மேலியில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் நிறைவு கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முதன்முதலாக மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் கலைஞரால் 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2010 பிப்ரவரி 23ம்தேதி நெம்மேலியில் அன்றைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.805 கோடியே 8 லட்சத்தில் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 2வது கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, நெம்மேலியில் ரூ.1516 கோடியே 82 லட்சத்தில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது பணிகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இக்குழாய் அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்குள் கடலில் பதிக்கப்படும். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாய்.

மேலும், நிராகரிக்கப்பட்ட உவர்நீர் வெளியேற்றும் 1600 மிமீ விட்டமுள்ள 636 மீட்டர் நீளமுள்ள குழாயில் 600 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளது. 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் இயக்குதலுக்கான ஒப்புதல், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்படும் தருவாயில் உள்ளது. விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கப்படும்.

* சென்னையில் எந்த பகுதிகள் பயன்பெறும்
தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனிததோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

The post கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் முடிந்து நெம்மேலியில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nemmeli ,Minister ,KN Nehru ,Chennai ,Chennai Drinking Water Supply and Sewerage Board ,Dinakaran ,
× RELATED அரசு போக்குவரத்து கழகம் சார்பில்...